close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்த 'கைதி' நடிகர்!

Sunday, April 11, 2021 • தமிழ் Comments

மணிரத்னம் இயக்கிவரும் பிரமாண்டமான திரைப்படமான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ‘கைதி’ படத்தின் ஹீரோவான கார்த்தி தான் நாயகன் என்ற நிலையில் தற்போது அதே படத்தில் நடித்த இன்னொரு நடிகர் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. எம்ஜிஆர், சிவாஜி, கமல் உள்பட பலர் இந்த படத்தை உருவாக்க முயற்சித்தும் முடியாமல் போகவே மணிரத்னம் தற்போது இந்த படத்தை இயக்கி வருகிறார்

இந்த நிலையில் இந்த படத்தில் கிட்டத்தட்ட தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரை உலகின் பெரும்பாலான முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் ‘கைதி’ திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவர் இணைந்துள்ளார்.

‘கைதி’ திரைப்படத்தில் ராம் என்ற கேரக்டரில் நடித்த அம்ஜத்கான் தற்போது முக்கிய வேடத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்துள்ளார். இதனை அவரே தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ’பொன்னியின் செல்வன்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். அவருக்கு என்ன கேரக்டராக இருக்கும் என்று ரசிகர்கள் இப்பொழுது ஆழ்ந்த சிந்தனையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, ஐஸ்வர்யாராய், மோகன்பாபு, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறித்து தெரிந்ததே.

Get Breaking News Alerts From IndiaGlitz