close
Choose your channels

காஷ்மீருக்கு பின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே? 'லியோ' குறித்த மாஸ் தகவல்..!

Thursday, March 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கொடைக்கானலில் நடந்த நிலையில் தற்போது காஷ்மீரில் நீண்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத் உள்பட பட குழுவினர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காஷ்மீர் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிந்து விடும் என்றும் மார்ச் 25ஆம் தேதி படக்குழுவினர் சென்னை திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடும் குளிர் இருந்தாலும் திட்டமிட்டபடி படப்பிடிப்பை லோகேஷ் கனகராஜ் நடத்தி வருவதாகவும் அவருக்கு படக்குழுவினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாகவும் 30 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பிலும் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடைந்து விடும் என்றும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் செப்டம்பர் முதல் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

லலித தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos