மே 10ல் ரிலீஸ் ஆகும் கவின், சந்தானம் படம்.. இன்னொரு படமும் அதே நாளில் ரிலீஸ்.. இன்று மாலை டிரைலர்..!

  • IndiaGlitz, [Monday,April 29 2024]

கவின் நடித்த ’ஸ்டார்’ மற்றும் சந்தானம் நடித்த ’இங்க நான் தான் கிங்கு’ ஆகிய படங்கள் மே 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதே நாளில் இன்னொரு இளம் நடிகரின் படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு என்றும் .அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் வரும் வெள்ளிக்கிழமை சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணாவின் ’அரண்மனை 4’ திரைப்படம் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் அடுத்த வாரம் அதாவது மே 10ஆம் தேதி கவின் நடித்த ’ஸ்டார்’ மற்றும் சந்தானம் நடித்த ’இங்க நான் தான் கிங்கு’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன என்பதும் இந்த இரண்டு படங்களின் டிரைலர்கள் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் இந்த படத்தின் இந்த இரண்டு படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அதே மே 10ஆம் தேதி அர்ஜுன் தாஸ் நடித்த ‘ரசவாதி என்ற திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருள்நிதி நடித்த ’மௌனகுரு’ படத்தை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இயக்குனர் சாந்தகுமார் தயாரித்து இயக்கும் இந்த படம் தமன் இசையில் உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். ரம்யா சுப்பிரமணியன், ஜிஎம் சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் சாந்தகுமார் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு சரவணன் இளவரசு ஒளிப்பதிவும், சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளனர்.

More News

'குட் பேட் அக்லி' படக்குழு எடுத்த அதிரடி முடிவு.. 'விடாமுயற்சி' படக்குழுவினர் அதிர்ச்சி..!

அஜித் நடிக்கவிருக்கும் 'குட் பேட் அக்லி' என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்றும் அதற்கு முன்பே 'விடாமுயற்சி

நிஜமாகவே சிகரத்தை அடைந்த ஜோதிகா.. இதுவரை எந்த நடிகையும் செய்யாத புதிய முயற்சி..!

நடிப்பில் சிகரத்தை அடைந்தவர்கள் என்று சில நட்சத்திரங்களை ரசிகர்கள் பாராட்டி வரும் நிலையில் நடிகை ஜோதிகா உண்மையாகவே எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த வீடியோவை

'குக் வித் கோமாளி'க்கு போட்டியாக சன் டிவி நிகழ்ச்சி.. விஜய் டிவி பிரபலங்களை இழுத்துவிட்ட வெங்கடேஷ் பட்..!

விஜய் டிவியில் 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் இரண்டு எபிசோடுகளும் கலகலப்பாகவும் சூப்பரான இருந்ததாக விமர்சனங்கள் வெளியாகி கொண்டிருக்கும்

ஒரு வார்த்தை கூட உங்களை பற்றி சொல்லலையே.. வருத்தப்பட்ட ரசிகருக்கு வெங்கடேஷ் பட் சொன்ன பதில்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி நேற்று ஆரம்பித்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன்களிலும் பங்கேற்ற வெங்கடேஷ் பட் குறித்து யாருமே பேசாதது குறித்து ரசிகர் ஒருவர் வருத்தப்பட, அவருக்கு ஆறுதல்

கையில் துப்பாக்கி, உடம்பெல்லாம் ரத்தம்.. சமந்தாவின் புதிய பட அறிவிப்பு.. டைட்டில் போஸ்டர் வீடியோ..!

நடிகை சமந்தா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்