close
Choose your channels

கீர்த்திசுரேஷை அடுத்து 'தலைவர் 168' படத்தில் இணைந்த பிரபல நடிகர்

Monday, December 9, 2019 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், டி இமான் இசையமைப்பில் தயாராக உள்ள ’தலைவர் 168’ படத்தின் அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது என்பது தெரிந்ததே

இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக வெளிவந்த செய்தியை சற்று முன் பார்த்தோம். தற்போது கீர்த்தி சுரேஷை பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் இணைந்து உள்ளதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் இணையதளத்தில் உறுதி செய்துள்ளது. ஏற்கனவே ரஜினிகாந்த் படத்தில் பிரகாஷ்ராஜ், ’படையப்பா’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு வரும் 15ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் அன்றைய தினம் இந்த படத்தில் நடக்கும் அனைத்து நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கல் அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz