close
Choose your channels

குஷ்பு, சினேகாவை அடுத்து ரம்பா சந்தித்த நடிகைகள் யார் யார் தெரியுமா? வைரல் புகைப்படம்!

Monday, August 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை ரம்பா கனடாவைச் சேர்ந்த தொழில் அதிபர் இந்திரஜித் பத்மநாபனை திருமணம் செய்து கொண்ட பின்னர் கனடாவில் செட்டிலாகி விட்டார் என்பதும் அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இந்தியா வந்த ரம்பா தன்னுடைய பழைய தோழிகளை சந்தித்து வருகிறார் என்பதை பார்த்தோம். குறிப்பாக குஷ்பு மற்றும் அவரது மகள்களை சந்தித்த ரம்பா, நடிகை சினேகா நடத்திய வரலட்சுமி பூஜையில் கலந்து கொண்டார் என்பதும், இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் நடிகை மீனாவை சந்தித்துள்ளார். சமீபத்தில் தனது கணவரை இழந்த மீனாவை சந்தித்து அவர் ஆறுதல் கூறியுள்ளார். மேலும் இந்த சந்திப்பின்போது நடிகைகள் சங்கீதா மற்றும் சங்கவி ஆகியோர் உடன் இருந்தனர் என்பதும் அனைவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.