'லால் சலாம்' ரிலீஸ் ஆனவுடன் தொடர் அப்டேட் தான்: அஜித் ரசிகர்களுக்கு ஒரு குஷியான தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,January 30 2024]

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ’லால் சலாம்’ திரைப்படம் பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆனவுடன் அடுத்த கட்டமாக தொடர்ச்சியாக இந்நிறுவனம் தயாரித்து வரும் இன்னொரு படமான ’விடாமுயற்சி’ படத்தின் அப்டேட்டுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் திசையில் உருவாகி வரும் திரைப்படம் ’விடாமுயற்சி’. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்த நிலையில் தற்போது அந்நாட்டில் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் நடக்க உள்ளதாகவும் அனேகமாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும் வரும் கோடை விடுமுறைகள் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது .

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் 5 பாடல்களையும் கம்போஸ் செய்து முடித்து விட்டதாகவும் அதில் ஒரு பாடல் வேற லெவலில் வந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ’லால்சலாம்’ ரிலீஸ் முடிந்தவுடன் ’விடாமுயற்சி’ படத்தின் தொடர்ச்சியாக வெளியிட லைக்கா நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுவதால் அஜித் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்,.

More News

அடுத்த படத்திற்கு லொகேஷன்.. லண்டன் செல்கிறார் விஷால்..!

நடிகர் விஷால், இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவான 'ரத்னம்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் தற்போது அடுத்த படத்திற்கு லொகேஷன் பார்க்க லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் .. 'வேலுநாச்சியார்' படம் உண்மைதானா?

 உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் ஸ்ருதிஹாசன் நடிப்பில் சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்த

பவதாரிணியுடன் எடுத்துக்கொண்ட கடைசி புகைப்படம்.. வெங்கட் பிரபு உருக்கம்.!

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அவரது சகோதரரும் இயக்குனருமான வெங்கட் பிரபு, பவதாரிணி

பழனி கோயிலுக்குள் இந்து அல்லாதோருக்கு அனுமதி இல்லை: மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

பழனி முருகன் கோவிலுக்குள் இந்து அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என மதுரை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சர்ச்சைக்குரிய டீப் ஃபேக் வீடியோ.. பிக்பாஸ் தமிழ் நடிகையின் அதிர்ச்சி பதிவு..!

பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகையின் சர்ச்சைக்குரிய டீப் ஃபேக் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இது குறித்து