ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல, இன்னொரு 'லியோ' பிரபலமும் இணைகிறார்.. 'தலைவர் 171' படத்தின் அப்டேட்..!

  • IndiaGlitz, [Sunday,October 08 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் தலைவர் 171’

இந்த படத்தின் அறிவிப்பு கடந்த நாட்களுக்கு முன்னால் வெளியான நிலையில் இந்த படம் குறித்த சில தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. முதல் கட்டமாக தற்போது ரஜினிகாந்த் ’தலைவர் 170’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் ’தலைவர் 171’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தெரிகிறது.

மேலும் இந்த படத்தில் ’லியோ’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மனோஜ் பரமஹம்சா பணிபுரிய இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் சில காட்சிகள் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி ’தலைவர் 171’ படத்தின் பாடல் ஆசிரியராக ’லியோ’ படத்திற்கு இரண்டு பாடல்களை எழுதிய விஷ்ணு எடாவன் தான் எழுதப் போகிறார் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் இது ஒரு புதுமையான முயற்சி கொண்ட படம் என்றும் தனது முதல் படமான ’மாநகரம்’ படத்தை இயக்குவதற்கு முன்பு இந்த படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் எழுதி விட்டதாகவும் இந்த கதையை கேட்ட 20 நிமிடத்தில் ரஜினிகாந்த் ஓகே சொல்லி விட்டதாகவும் தெரிகிறது.

மொத்தத்தில் ’லியோ’ ரிலீஸ்க்கு பின்னர் முழு வீச்சில் லோகேஷ் கனகராஜ் ’தலைவர் 171’ படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் இறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

முதல்ல பிரதீப்பை எலிமினேட் செய்யுங்க சார்.. கமல்ஹாசனிடம் பவா செல்லத்துரை..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இன்று, முதல் எலிமினேஷன் நடைபெற இருப்பதால் போட்டியாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ரெண்டு பேருக்கு மட்டும் புரிஞ்சா போதும்.. ஸ்ட்ரைக் காரணத்தை கூறிய கமல்ஹாசன்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் விஜய் வர்மாவுக்கு ஸ்ட்ரைக் அட்டையை கமல்ஹாசன் காண்பித்தார் என்பதும் இதே போன்ற மூன்று முறை ஸ்ட்ரைக் அட்டையை பெற்றவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய

'லியோ' படத்தின் பிசினஸ் மட்டும் இத்தனை கோடியா? அப்ப வசூல் எத்தனை கோடி இருக்கும்?

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பிசினஸ் தகவல் வெளியாகி மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

'விடாமுயற்சி' படப்பிடிப்பில் இருந்து த்ரிஷா வெளியிட்ட வீடியோ.. இணையத்தில் வைரல்..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் த்ரிஷாவும் கலந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியானது.

'லியோ' ரிலீசுக்கு 6 நாட்களுக்கு முன் ரிலீசாகும் பரத்-ரகுமான் திரைப்படம்.. போஸ்டர் வைரல்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு 6 நாட்களுக்கு முன்னர் பரத் மற்றும் ரகுமான் இணைந்து நடித்த படத்தின் ரிலீஸ் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.