லாக்டவுனுக்கு பின் முதல் 50வது நாள் படம்: 'மாஸ்டர்' படத்தை தெறிக்க வைக்கும் ரசிகர்கள்! 

  • IndiaGlitz, [Wednesday,March 03 2021]

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் ’மாஸ்டர்’ கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவந்தது என்பதும் இந்த திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ரசித்து பார்த்தார்கள் என்பது தெரிந்ததே

லாக்டவுன் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேல் திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தது என்பதும் திரையரங்குகள் திறந்த பின்னரும் பார்வையாளர்கள் வராமல் திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் அவதி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ’மாஸ்டர்’ படம் ரிலீஸ் ஆன பின்னர் தான் மீண்டும் பொது மக்கள் திரையரங்குகளுக்கு வர தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 50 நாட்கள் ஆனதை அடுத்து விஜய் ரசிகர்கள் ’மாஸ்டர்’ படத்தின் 50வது நாள் ஹேஷ்டேக்கான #Master50Days என்ற ஹேஷ்டேக்கை பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் தெறிக்க வைத்து வருகின்றனர்

’மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான 16 நாட்களில் ஓடிடியிலும் வெளியான போதிலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக 50-வது நாளை கடந்துள்ளது மிகப்பெரிய ஆச்சரியமாக கோலிவுட் திரையுலகில் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் லாக்டவுனுக்கு பிறகு திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடிய முதல் திரைப்படம் ’மாஸ்டர்’ தான் என்பது குறிப்பிடத்தக்கது

More News

இதெல்லாம் ஒரு கேள்வியா? உச்சநீதிமன்ற நீதிபதியின் கேள்விக்கு நடிகை டாப்ஸி காட்டம்!

தமிழ் மற்றும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை டாப்ஸி தொடர்ந்து சமூக விஷயங்களில் தலையிட்டு கருத்து கூறி வருகிறார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் டார்லிங்: 'பகல் நிலவு' அஸீமின் அந்த டார்லிங் யார் தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பகல் நிலவு' மற்றும் 'கடைக்குட்டி சிங்கம்' போன்ற சீரியலில் நடித்த நடிகர் அஸிம் தனது டார்லிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறிய இன்ஸ்டாகிராம் போஸ்ட்

மாலத்தீவில்  விஜய் டிவி டிடி: நீச்சல் குளத்தில் மிதந்தபடி பிரேக்பாஸ்ட், வீடியோ வைரல்!

கடந்த சில மாதங்களாக தமிழ் திரையுலக பிரபல நடிகைகள் மாலத்தீவுக்கு சென்று வருகின்றனர் என்பதும் மாலத்தீவில் பிகினி புகைப்படங்கள் உள்பட அழகிய புகைப்படங்களை அவர்களின் இன்ஸ்டாவில் பதிவு செய்தனர்

திருமணத்திற்காக சேர்த்து வைத்த பணத்தை 'மாஸ்டர்' படம் பார்க்க செலவு செய்த இளைஞர்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி 16 நாட்களில் ஓடிடியிலும் வெளியானது

'ப்ரெண்ட்ஷிப்' டீசர்: ஹர்பஜன்சிங்கிற்கு வாழ்த்து கூறிய சக கிரிக்கெட் வீரர்!

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதல் முதலாக நடிக்கும் 'ப்ரெண்ட்ஷிப்' என்ற திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.