'மாவீரனை' அடுத்து சிவகார்த்திகேயனின் அடுத்த 2 படங்களின் மாஸ் அப்டேட்..!

  • IndiaGlitz, [Saturday,February 18 2023]

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ’மாவீரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் நேற்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியானது என்பதும் இந்த பாடலின் வீடியோ இணையதளங்களில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

மேலும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது அடுத்த இரண்டு படங்கள் குறித்த அப்டேட்டுகள் வெளியாகி சிவகார்த்திகேயன் ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் திரைப்படம் ’அயலான்’. ரவிகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் தெரிவித்த இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜிஆர் ஸ்டூடியோ விரைவில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட்டுகள் வர இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோவையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

அதேபோல் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் 22வது திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளதோடு விரைவில் ’எஸ்கே 22’ படத்தின் அப்டேட்டை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

More News

அஜித்துக்கு தான் இதுக்கு காரணம்.. புதிய அவதாரம் எடுத்த மஞ்சுவாரியர்..!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த மஞ்சு வாரியார் தற்போது பிஎம்டபிள்யூ பைக் வாங்கியிருக்கும் நிலையில் இதற்கு அஜித்துக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் ஒருநாள் 'லவ் டுடே' படத்திற்காக வருத்தப்படுவார்: தனுஷ் பட நடிகர் பேட்டி..!

 கடந்த ஆண்டு வெளியான 'லவ் டுடே' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் 100-வது நாள் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது என்பதும் இதில் பிரதீப் ரங்கநாதன்,

'லியோ' காஷ்மீர் படப்பிடிப்பில் இவ்வளவு குளிரா? நடுக்கத்தில் படக்குழுவினர்..!

தளபதி விஜய் நடித்து வரும் 67வது திரைப்படமான 'லியோ' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், கெளதம்

ஹிப்ஹாப் தமிழா ஆதியை கயிற்றால் கட்டி வைத்த படக்குழு.. வைரல் வீடியோ..!

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழாவை படக்குழுவினர் கயிற்றால் கட்டி வைத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சமந்தாவுக்கு இது தேவையில்லை, உடனடியாக நிறுத்த வேண்டும்.. சக நடிகர் அறிவுரை..!

நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக மிகவும் கடினமான உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் இவ்வளவு கடினமான உடற்பயிற்சி செய்வதை சமந்தா உடனே நிறுத்த