close
Choose your channels

மகேஷ்பாபுவை அடுத்து இன்னொரு திரையுலக பிரபலத்திற்கு கொரோனா தொற்று!

Friday, January 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் மகேஷ்பாபு நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒரு திரையுலக பிரபலத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தமன் என்பதும் அவர் தற்போது விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 66’ உள்பட பல முக்கிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் வெளியான தகவலின்படி இசையமைப்பாளர் தமன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் ’எஸ்.கே.20’  திரைப்படத்திற்கான பாடல் கம்போஸிங்கில் தமன் ஈடுபட்டு இருந்தார் என்பதும் சிவகார்த்திகேயன் நேரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமன் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தமிழ் தெலுங்கு திரையுலகினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.