close
Choose your channels

மாஸ்டருக்கு பின் விஜய்சேதுபதியிடம் ஏற்படும் மாற்றம்!

Monday, February 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருவது தெரிந்ததே. இந்த படத்தில் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தின் படப்பிடிப்பில் விஜய்சேதுபதி கலந்து கொள்ள உள்ளார். ’மாஸ்டர்’ படத்திற்காக உடல் எடையை ஏற்றிய விஜய்சேதுபதி ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்திற்காக உடல் எடையை குறைக்க முடிவு செய்திருப்பதாகவும் இந்த மாற்றத்திற்காக அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு சென்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தரிசனம் செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். விரைவில்’காத்து வாக்குல ரெண்டு காதல்’படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்க உள்ளனர் என்பதும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.