மிஷ்கின், கெளதம் மேனனை அடுத்து 'லியோ' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் 2 பிரபலங்கள்..!

  • IndiaGlitz, [Friday,March 03 2023]

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’லியோ’ என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் மைனஸ் 12 டிகிரி குளிரில் கூட திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன

விஜய் மற்றும் த்ரிஷா ஆகிய இருவருக்கும் ஒரு சின்ன பிரேக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இருவரும் சென்னை திரும்பி உள்ளதாகவும் இருப்பினும் கௌதம் மேனன், அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்டோர் இன்னும் காஷ்மீர் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு மிஷ்கின் சென்னை திரும்பிய நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் கௌதம் மேனனும் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து ’லியோ’ படப்பிடிப்பில் ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் சஞ்சய்தத் ஆகிய இருவரும் இம்மாதம் மூன்றாவது வாரத்தில் ’லியோ’ படப்படிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் விஜய்யுடன் இவர்கள் இருவரும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விஜய், த்ரிஷா, சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

வெற்றிமாறனின் 'விடுதலை': சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ரெட் ஜெயண்ட்..!

 வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்த 'விடுதலை' என்ற திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் நிலையில் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து

ஹரிஷ் கல்யாண் - 'அட்டக்கத்தி' தினேஷ் படம்.. டைட்டில் அறிவிப்பு..!

ஹரிஷ் கல்யாண் மற்றும் 'அட்டக்கத்தி' தினேஷ் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது. 

லெஜண்ட் சரவணன் படத்தின் அதிரடி அறிவிப்பு.. இன்றே ஸ்பெஷல் விருந்து..!

 சரவணா ஸ்டோர் அண்ணாச்சி லெஜண்ட் சரவணன் நடித்த 'தி லெஜண்ட்' திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியானது என்றும் இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது என்பது தெரிந்ததே.

'இயற்கை' படத்தில் அறிமுகம், முதலமைச்சருடன் திருமணம்.. குட்டி ராதிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

'இயற்கை' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான நடிகை குட்டி ராதிகா முன்னாள் கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்ட நிலையில்

கணவரை 'சார்' என்று அழைத்த பிரபல பாடகி.. வைரல் வீடியோ..!

தமிழ் திரை உலகின் பிரபல பாடகி ஒருவர் தனது கணவரை விருது வழங்கும் விழாவின் மேடையில் 'சார்' என்று அழைத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.