தமிழக மேதையின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: 'ராக்கெட்டரி' படத்தை அடுத்து மாதவன்..!

  • IndiaGlitz, [Thursday,April 06 2023]

நம்பி நாராயணன் என்ற விஞ்ஞானியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த நடிகர் மாதவன் அடுத்ததாக தமிழக மேதை ஒருவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தை சேர்ந்த ஜிடி நாயுடு என்பவர் அறிவியல் மாமேதைகளில் ஒருவர் என்பதும் விவசாயம் மற்றும் இயந்திரவியல் சார்ந்த பல பொருள்களை அவர் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவையை சேர்ந்த இவர் தனது இளம் வயதிலேயே பல நூல்களை தானாகவே படித்து தனது அறிவுத் திறனை வளர்த்துக் கொண்டார் என்பதும் வாலிப வயதில் புரட்சிகரமாக இருந்த இவர் பல போராட்டங்களில் ஈடுபட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



ஜிடி நாயுடு இளம் வயதிலேயே மோட்டார் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்து பல தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டார் என்பதும் அந்த காலத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய லட்சாதிபதிகளில் ஒருவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மின்சாரவியல், ஊர்தி தொழில், வேளாண்மை உள்பட பல துறைகளில் இவரது கண்டுபிடிப்புகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.



இந்த நிலையில் தமிழகத்தின் மாபெரும் மேதைகளில் ஒருவரான ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதற்கு உரிமையை பெற்றுள்ள நிலையில் இதில் ஜிடி நாயுடு கேரக்டரில் மாதவன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

More News

அஜித்தின் 'சிட்டிசன்' நாயகி வசுந்தரா தாஸ் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? வைரல் புகைப்படங்கள்..!

அஜித் நடித்த 'சிட்டிசன்' உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்த நடிகை வசுந்தரா லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

இளையராஜாவின் இசையில் மியூசிக் ஸ்கூல் : மம்மி சொல்லும் வார்த்தை' பாடல் ரிலீஸ்..!

மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசையில் பன்மொழி மியூசிகல் திரைப்படமாக உருவாகும் "மியூசிக் ஸ்கூல்" படத்திலிருந்து, வெளியீட்டு தேதி அறிவிப்புடன் கூடிய  மோஷன் போஸ்டர்  வெளியானதை

அம்மா போல் கொள்ளை அழகு.. சினிமாவுக்கு வரும் 'ஆளவந்தான்' நடிகையின் 18 வயது மகள்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'ஆளவந்தான்' என்ற திரைப்படம் உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களிலும் பல பாலிவுட் படங்களிலும் நடித்த நடிகையின் 18 வயது மகள் விரைவில் சினிமாவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

நயன்தாராவின் 75 வது படத்தில் இணைந்த 'ராஜா ராணி' நடிகர்.. பிறந்த நாளில் இன்ப அதிர்ச்சி..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் 75 ஆவது படம் குறித்த அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இந்த படத்தில் நயன்தாராவின் 'ராஜா ராணி' படத்தில் நடித்த நடிகர் இணைந்துள்ளதாக

முதல் முறையாக கமல்ஹாசன் படத்தில் நயன்தாரா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் நடித்து வரும் நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தவிர கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார் என்பது