ஒரு லட்சத்து ஒன்னா ரூபா.. படைத்தலைவனை அடுத்து இன்னொரு படத்தில் சண்முக பாண்டியன்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த 'படைத்தலைவன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, ரிலீசுக்கு தயாராகி வருகிறது என்பதும், விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சண்முக பாண்டியன் நடித்து வரும் இன்னொரு படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து, தற்போது அடுத்த கட்ட பணிகள் தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரபல இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில், சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் 'கொம்பு சீவி'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அதையடுத்து, புதிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சண்முக பாண்டியன், சரத்குமார், காளி வெங்கட், கல்கி ராஜா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார்.
கடந்த 1996 ஆம் ஆண்டு உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதிகளில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு, முழுக்க முழுக்க ஒரு கிராமத்து கதையை அம்சமாக இந்த படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை காணும் போது, அடுத்தடுத்த சில மாதங்களில் 'படைத்தலைவன்' மற்றும் 'கொம்பு சீவி' ஆகிய இரண்டு சண்முக பாண்டியன் படங்களும் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
And it begins… 🔥
— Nikil Murukan (@onlynikil) May 20, 2025
Dubbing kicks off for #Kombuseevi. A pakka rural ride packed with raw emotions and rustic charm💥@realsarathkumar @ShanmugaP_Actor#Kombuseevi #OnceUponATimeInUsilampatti
A @ponramVVS Direction
Produced By @StarCinemas_ @mukesh_chelliah
A @thisisysr… pic.twitter.com/WEqz43LNBn
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com