பாவனியை அடுத்து பிரியங்கா: வெள்ளிக்கிழமை மட்டும் பெட்டிப்பாம்பாய் அடங்கும் போட்டியாளர்கள்!

திங்கள் முதல் வியாழன் வரை போட்டியாளர்கள் சண்டை சச்சரவு செய்வதும் சனி ஞாயிறு கமல்ஹாசன் நாள் என்பதால் வெள்ளிக்கிழமை பெட்டிப்பாம்பாக அடங்கி நல்ல பிள்ளைபோல் இருப்பதையும் கடந்த ஐந்து சீசன்களில் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் நேற்று வரை ஆவேசமாக சண்டை போட்ட பாவனி, இன்று திடீரென ராஜு மற்றும் சிபியிடம் சமாதானம் செய்து கொண்டு, அவர்களை கட்டிப்பிடித்து வெள்ளை கொடியையும் காட்டி விட்டார் என்பதை முதல் புரமோவில் பார்ப்போம்.

இந்த நிலையில் அடுத்ததாக தாமரை மற்றும் பிரியங்கா இந்தியா-பாகிஸ்தான் போல் கடந்த சில நாட்களாக சண்டை போட்டுக்கொண்ட நிலையில் தற்போது திடீரென இருவரும் சமாதானமாகி கட்டிப்பிடித்து கொண்ட காட்சி அடுத்த புரமோவில் உள்ளது.

இந்த பிரச்சினைகள் குறித்து கமல்ஹாசன் அதிரடியாக கேள்வி கேட்பார் என்று எண்ணியே தாங்கள் சமாதானம் அடைந்து விட்டதாக கூறுவதற்காக இந்த நாடகம் நடக்கின்றதா? என்ற சந்தேகமும் பார்வையாளர்களுக்கு தற்போது வருகிறது. இந்த சமாதானம் உண்மையா? இல்லையா? என்பது வரும் திங்கட்கிழமை தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சர்ச்சைக்குரிய படத்திற்கு சமந்தா பெற்ற விருது: குவியும் வாழ்த்துக்கள்!

சமந்தா நடித்த 'தி ஃபேமிலிமேன் 2' என்ற  வெப்தொடர் கடந்த சில மாதங்களுக்கு முன் அமேசானில் வெளியான நிலையில் இந்த தொடருக்கு ஒரு சில அமைப்புகளால் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்': சன் பிக்சர்ஸ் வெளியிட்ட பூஜா ஹெக்டே வீடியோ!

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் நாயகியான பூஜா ஹெக்டேவின் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

'டான்' படத்தின் சூப்பர் அப்டேட்: சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குஷி!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டான்' படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று வெளிவந்திருக்கும் நிலையில் அவரது ரசிகர்கள் தற்போது குஷியில் உள்ளனர்.

டிரம்ஸ் வாசிக்கும் விஜய்: புகைப்படத்தின் பின்னணி இதுதான்!

கடந்த சில மணி நேரங்களாக விஜய் டிரம்ஸ் வாசிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த புகைப்படத்தின் பின்னணியில் நெல்சன் உள்பட படக்குழுவினர் உள்ளனர்

தோனி 100 கோடி நஷ்டஈடு கேட்ட வழக்கு… நிராகரிக்க கோரிய மனுவில் நீதிபதி அதிரடி!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுப்பெற்ற