பொங்கலுக்கு பின் ரிலீசாகும் படங்கள்.. பா ரஞ்சித் - ஆர்ஜே பாலாஜி படங்கள் ஒரே நாளில் மோதல்...!

  • IndiaGlitz, [Saturday,January 06 2024]

பொங்கல் விருந்தாக தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ அருண் விஜய் நடித்த ’மிஷன் சாப்டர் ஒன்’ மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நான்கு பிரபலங்களின் படங்கள் பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாக உள்ளதை அடுத்து சில சின்ன பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி உள்ள ’ப்ளூ ஸ்டார்’ என்ற திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி அதாவது பொங்கல் முடிந்த இரண்டு வாரங்களில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் சக்தி பிலிம் பேக்டரி ரிலீஸ் செய்கிறது.

இதையடுத்து அதே ஜனவரி 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இன்னொரு படம் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவான ’சிங்கப்பூர் சலூன்’. இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜியுடன் சிறப்பு தோற்றத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார்.

மேலும் மோகன்லால் நடிப்பில் உருவான ’மலைக்கோட்டை வாலிபன்’ என்ற படமும் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் ஜனவரி 25ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொங்கலுக்கு அடுத்த வாரம் எந்த திரைப்படம் வெளியாகவில்லை என்றாலும் ஜனவரி 25ல் தற்போது இரண்டு தமிழ் படங்கள் மற்றும் மோகன்லாலின் ’மலைக்கோட்டை வாலிபன்’ ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில படங்கள் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

டிடிஎப் வாசனுடன் நெருக்கமாக இருக்கும் நடிகை யார்? வைரல் வீடியோ, புகைப்படங்கள்..!

டிடிஎப் வாசன் தனது சமூக வலைத்தளத்தில் நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அவை வைரல் ஆகி வருகிறது.  

இன்று மாலை 'கலைஞர் 100' கலை விழா.. ரஜினி, கமல் உறுதி.. அஜித், விஜய் கலந்து கொள்வார்களா?

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திரையுலகினர் சார்பில் 'கலைஞர் 100' என்ற கலை விழா இன்று மாலை நடைபெற உள்ளது.

வீட்டுல ஃபேன் இல்லை, அதனால ஏசி போடுங்க.. பிஆர் டீமுக்கு மாயா சொன்ன ரகசிய தகவலா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த வாரம் முடிவடைய இருக்கும் நிலையில் பூர்ணிமா நேற்று 16 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுத்து விட்டு சென்று விட்டார்.

விமான விபத்தில் பிரபல நடிகர் 2 மகள்களுடன் மரணம்.. புத்தாண்டு கொண்டாடிவிட்டு திரும்பியபோது விபத்து..!

பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் விமான விபத்தில் தனது இரண்டு மகள்களுடன் பரிதாபமாக பலியான  சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்னொரு வாட்டி என்னை ஏலியன்னு சொன்னே, மனுஷனா மாறிடுவேன்: 'அயலான்' டிரைலர்..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது