close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' வெற்றியால் த்ரிஷாவுக்கு குவியும் வாய்ப்பு.. எல்லாமே மாஸ் படங்கள் தான்..!

Monday, May 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை என்ற கேரக்டரில் சூப்பராக நடித்த நடிகை த்ரிஷாவுக்கு தற்போது திரையுலகில் வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகில் நாயகியாக த்ரிஷா நடித்து வருகிறார் என்பதும் தற்போதைய இளம் நடிகைகளுக்கு இணையாக அவர் பிஸியாக உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ வெற்றிக்கு பிறகு அவர் தளபதி விஜய் நடித்து வரும் ’லியோ’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அடுத்ததாக அஜித்தின் ’விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அஜித்தின் ’விடாமுயற்சி’ படத்தில் த்ரிஷா நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

அதுமட்டுமின்றி வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த திரைப்படத்தில் த்ரிஷா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பதும் கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் மூன்று பிரபல நடிகர்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் த்ரிஷா ஒப்புக்கொண்டிருக்கும் படங்கள் எல்லாமே மாஸ் படங்களாக இருப்பதால் மீண்டும் தமிழ் திரை உலகில் அவர் ஒரு சுற்று வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.