பூஜா ஹெக்டேவை அடுத்து இன்னொரு விஜய் பட நடிகைக்கு கொரோனா?

  • IndiaGlitz, [Monday,April 26 2021]

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இது குறித்து பூஜா ஹெக்டேவும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடித்த இன்னொரு படத்தின் நடிகைக்கும் கொரோனா தொற்றின் அறிகுறி இருப்பதை அடுத்து அவரும் தனிமைப்படுத்தி கொண்டார். தளபதி விஜய் நடித்த ’புலி’ படத்தில் நடித்த நாயகிகளில் ஒருவர் நந்திதா ஸ்வேதா. இவர் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் வீட்டில் தனக்குத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக சமூகவலைதளத்தில் அறிவித்துள்ளார். மேலும் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதனை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நடிகை நந்திதா தற்போது ’ஐபிசி 376’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை ரவிக்குமார் சுப்பிரமணியன் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது தெரிந்ததே.

More News

ஆக்சிஜனை காரணம் காட்டி வேஷமா? ஸ்டெர்லைட் குறித்து கடுமையாக விமர்சிக்கும் வீடியோ!

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலை என்பது தாமிரத்தை உருக்கும் தொழிலுக்காக கடந்த 1993 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.

கேமிரமேனா வேலைக்கு சேர்ந்துடலாம் போல: சாக்சி அகர்வால் புகைப்படத்திற்கு நெட்டிசன் கமெண்ட்!

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான சாக்சி அகர்வால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பல திரைப்படங்களில் ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

படப்பிடிப்பின் இடையில் பிரசாந்த்-யோகிபாபு செய்த வேலையை பாருங்கள்: வைரல் வீடியோ

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான 'அந்தாதூன்' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான 'அந்தகன்' என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இங்கிலாந்தில் குறைந்த கொரோனா பாதிப்பு....!

இங்கிலாந்தில் 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு இம்முறை கொரோனா பாதிப்பானது குறைந்துள்ளது.

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி!

ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது