ரூ.1 லட்சம் மின் கட்டணம்: பிரசன்னாவை அடுத்து மின்துறை மீது குற்றம்சாட்டிய தமிழ் நடிகை

  • IndiaGlitz, [Thursday,June 25 2020]

சமீபத்தில் நடிகர் பிரசன்னா தனது வீட்டிற்கு மிக அதிகமாக மின்கட்டணம் வந்ததாகவும் மின் துறையினர் செய்யும் முறைகேடுகளில் இதுவும் ஒன்று என்று டுவிட் செய்திருந்தார். இந்த ட்விட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மின்துறை அவருடைய மின் கட்டணம் குறித்து விளக்கம் அளித்தது. அந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்ட பிரசன்னா அதன் பின் தனது டுவிட்டரில் வருத்தம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பிரசன்னாவை அடுத்து ஜீவா நடித்த ’கோ’என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின் பாரதிராஜாவின் ‘அன்னக்கொடி’ உள்ளிட்ட ஒருசில தமிழ் திரைப்படங்களில் நடித்த கார்த்திகா நாயர், மும்பை மின்துறை மீது தனது டுவிட்டரில் புகார் கூறியுள்ளார்.

ஜூன் மாத மின்கட்டணம் தன்னுடைய மும்பை வீட்டிற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் வந்திருப்பதாகவும் இவ்வளவு அதிகமாக வருவதற்கு வாய்ப்பில்லை என்றும் மின்துறை இதில் முறைகேடு செய்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தனக்கு வந்த இதே பிரச்சனை தனது பகுதியில் உள்ள பலருக்கும் வந்ததாகவும் இதுகுறித்து மகாராஷ்டிர அரசு உடனடியாக தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கார்த்திகா நாயரின் இந்த டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

பல படங்களில் ஜோடியாக நடித்த சூப்பர் ஸ்டாருக்கு சகோதரியாக நடிக்கும் சுஹாசினி: 

திரையுலகைப் பொறுத்தவரை ஒரு நடிகை, பிரபல நடிகருக்கு ஜோடியாக நடித்திவிட்டு அதன் பின்னர் அதே நடிகருக்கு அக்காவும் அம்மாவும் நடிப்பது ஆச்சரியப்பட வைக்கும் ஒரு விஷயம் இல்லை.

கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகரின் மகன்: போலீசில் புகார் அளிக்காதது ஏன்?

பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் மகன் யாஷ்வரதன் அஹூஜா என்பவர் நேற்று மும்பையில் கார் விபத்து ஒன்றில் சிக்கிக் கொண்டதாக வெளிவந்த செய்தியால் பாலிவுட் திரையுலகம் பெரும் பரபரப்பில் உள்ளது.

Fair & lovely யில் இனிமே Fair இருக்காது: பெயர் மாற்றப்படுகிறது!!! காரணம் என்ன தெரியுமா???

ஒரு காலத்தில் மேக் அப் என்றாலே அது Fair & lovely க்ரீம் என்றுதான் இந்தியர்கள் புரிந்து கொண்டனர்.

குழப்பத்தில் கொரோனா: வந்தது தங்கத்தினால் ஆன மாஸ்க்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்தியாவில்  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை

இந்திய வரலாற்றில் இருண்ட நாள் இன்று ... மீளா கறுப்புக்குள் புகுந்துகொண்ட ஜுன் 25 பற்றி சில சுவாரசிய தகவல்கள்!!!!

இந்திய வரலாற்றில் ஒரு இருண்ட காலக் கட்டமாக எமெர்ஜென்சி நிலை அறியப் படுகிறது