புகழை அடுத்து பிஎம்டபிள்யூ கார் வாங்கிய 'குக் வித் கோமாளி' பிரபலம்: வைரல் வீடியோ

‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘குக்’களும் கோமாளிகளும் ஏற்கனவே பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் தான் என்றாலும் இந்த நிகழ்ச்சி அவர்களுக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்து உள்ளது என்பதும் அதுமட்டுமின்றி புகழ், ஷிவாங்கி, பவித்ரா, தர்ஷா உள்பட ஒருசிலருக்கு திரைப்பட வாய்ப்புகளும் இந்த நிகழ்ச்சியின் பிரபலத்தால் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ‘குக் வித் கோமாளி’ புகழ் புதிய கார் ஒன்றை வாங்கினார் என்பதும், எங்கள் பரம்பரையிலேயே கார் வாங்கிய முதல் நபர் நான் தான் என்று அவர் தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது புகழை அடுத்து ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட், புதிய பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமாளிகளில் ஒருவரான தங்கதுரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்த வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில் செஃப் வெங்கடேஷ் பட் அவர்கள் புதிய பிஎம்டபிள்யூ கார் வாங்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த காரில் தங்கதுரை, வெங்கடேஷ் பட், பப்பு, ரக்சன் ஆகியோர் ரைட் செய்யும் காட்சிகளும் உள்ளன.

More News

'குக் வித் கோமாளி': அரையிறுதிக்கு தகுதி பெற்ற 4வது போட்டியாளர் இவரா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது என்பதும்

ஆயிரம் விளக்கு தொகுதி: எழிலனின் சர்ச்சை பேச்சால் குஷ்புவின் வெற்றி உறுதியாகிறதா?

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக நடிகை குஷ்பு போட்டியிடும் நிலையில் அந்த தொகுதியில் திமுக வேட்பாளராக எழிலன் போட்டியிடுகிறார். இருவரும் ஆயிரம்விளக்கு தொகுதியில்

விவாகரத்தான மனைவியுடன் தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்ற பிரபல நடிகர்!

பிரபல நடிகர் ஒருவர் விவாகரத்தான முன்னாள் மனைவியுடன் தியேட்டருக்கு சென்று திரைப்படம் பார்க்கச் சென்ற புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

எல்லாம் உங்களுக்காத்தான்..! அருப்புக்கோட்டையில் தீவிர பிரச்சாரத்தில் எடப்பாடியார்..!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கும், வைகைச் செல்வனை

கார்த்தியின் 'சுல்தான்' சென்சார் மற்றும் உறுதி செய்யப்பட்ட ரிலீஸ் தேதி!

கார்த்தி நடிப்பில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சுல்தான்'. இந்த படம் ஏப்ரல் 2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக