மீண்டும் ஒரு மாஸ் ஹீரோவுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடும் சமந்தா?

தெலுங்கு திரை உலகின் மாஸ் ஹீரோவான அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படத்தில் சமந்தா ஆடிய ’ ஊ சொல்றியா மாமா, ஊஊ சொல்றியா மாமா’ என்ற ஐட்டம் டான்ஸ் பாடல் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தின் வெற்றிக்கு இந்த பாடலும் ஒரு முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமந்தாவை அடுத்து ரெஜினா, தமன்னா உள்பட மேலும் சில முன்னணி நடிகைகள் ஒருசில படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி தெலுங்கு திரை உலகின் இன்னொரு மாஸ் நடிகரான விஜய் தேவரகொண்டா நடித்து வரும் ’லிகர்’ என்ற திரைப்படத்திலும் சமந்தா ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

’புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ஐட்டம் டான்ஸ் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதால் விஜய் தேவரகொண்டா படத்திலும் சமந்தா ஐட்டம் டான்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மெலடி இசை அரசர் இமான் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி இமான் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் மூன்று ஹீரோயின்கள்: யார் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை ஹீரோ மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸ் நாட்டின் சூப்பர் லொகேஷனில் சமந்தா: வைரல் புகைப்படம்!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் தனது தோழியுடன் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்

20 ஆண்டுகளுக்கு பின் நல்ல கதையில் நடிக்கிறேன்: தயாரிப்பாளரிடம் கூறிய தளபதி விஜய்!

 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு நல்ல கதையை கேட்டு இருக்கிறேன் என தளபதி விஜய் தன்னிடம் கூறியதாக 'தளபதி 66' படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பேட்டி அளிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இயக்குனர் நெல்சனை சந்தித்த பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ! வைரல் புகைப்படம்!

பிக்பாஸ் டைட்டில் வின்னரான ராஜூ சமீபத்தில் இயக்குனர் நெல்சனை சந்தித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.