ரஜினி, கமல், விஜய், ஷாருக்கான்.. அடுத்து யாருடன் மோதுகிறார் விஜய்சேதுபதி?

  • IndiaGlitz, [Thursday,November 03 2022]

ரஜினி, கமல், விஜய், ஷாருக்கான் ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக பிரபல நடிகர் ஒருவருடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ ஷாருக்கான் நடித்து வரும் ’ஜவான்’ ஆகிய திரைப்படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார் என்பதும் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து இதுவரை வெளியான அனைத்து படங்களும் சூப்பர்ஹிட் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரஜினி, கமல், விஜய், ஷாருக்கான் ஆகியோர்களை தொடர்ந்து மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தேசிய விருது பெற்ற ’காக்கா முட்டை’ என்ற படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

More News

மருத்துவமனைக்கு சென்று சமந்தாவை பார்த்தாரா நாக சைதன்யா? பரபரப்பு தகவல்!

நடிகை சமந்தா சமீபத்தில் அரிய வகை நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை அவருடைய முன்னாள் கணவர் நாக சைதன்யா மருத்துவமனையில் சென்று பார்த்ததாக

ஏர்போர்ட்டில் கட்டிப்பிடித்து செல்பி எடுத்து கொண்ட கீர்த்தி சுரேஷ்.. யாரை தெரியுமா?

ஹைதராபாத் ஏர்போர்ட்டில் தன்னுடைய நெருங்கிய தோழியை கட்டிப்பிடித்து நடிகை கீர்த்தி சுரேஷ் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

பிக்பாஸ் வீட்டில் நடனத்தில் கலக்கிய ஜனனி.. வைரல் வீடியோ

பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்களில் ஒருவரான ஜனனி நடனத்தில் கலக்கிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

கடலை போடுவதற்கு இத்தனை லட்சம் சம்பளம் சம்பளமா? அசல் கோலாருக்கு அடித்த அதிர்ஷடம்!

பிக்பாஸ் போட்டியாளராக சென்று பிரபலமாக வேண்டும் என்றும் அந்த பிரபலத்தை வைத்து சின்னத்திரை மற்றும் பெரிய திரைகளில் வாய்ப்புகள் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பலர் போட்டியாளர்களாக பிக்பாஸ்

'தளபதி 67' படத்தில் நடிப்பதை மறைமுகமாக உறுதி செய்த பிரபல நடிகர்: இன்னும் எத்தனை பேர்?

தளபதி விஜய் நடித்திருக்கும் 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படமான 'தளபதி 67' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய