ரஜினியை அடுத்து மேலும் ஒரு பிரபல நடிகருக்கு அறுவை சிகிச்சை!

  • IndiaGlitz, [Saturday,November 06 2021]

பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ’ஆர்.ஆர்.ஆர்.’ என்ற திரைப்படத்தின் ஹீரோக்களில் ஒருவரான ஜூனியர் என்டிஆர் கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடிகர் ஜூனியர் என்டிஆர் சமீபத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவருக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது ஜூனியர் என்டிஆர் ஓய்வில் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் சிரஞ்சீவி ஆகியோர்களுக்கு அறுவை சிகிச்சைகள் நடந்த நிலையில் தற்போது ஜூனியர் என்டிஆருக்கும் அறுவை சிகிச்சை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் தேஜா நடித்த ’ஆர்.ஆர்.ஆர்.’ என்ற திரைப்படத்தின் கிளிம்ப்ச் வீடியோ சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த வீடியோ மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

'என்னத்த சொல்றது': 'ஜெய்பீம்' படம் குறித்து இயக்குனர் பார்த்திபன்! 

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல் பிரபலங்களும் உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல

நடிகர் அருண்விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா? வைரல் புகைப்படம்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா என அவரது குடும்பத்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளன.

நீட் தேர்வால் தமிழகத்தில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை!

சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் விஷம் குடித்து

'ஜெய்பீம்' வெற்றி எதிரொலி: பழங்குடியின மாணவிகளுக்கு உதவிய விஜய், சூர்யா ரசிகர்கள்!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் வெளியான பிறகு பழங்குடியின மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு

கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டார்… துணை பிரதமர் மீது பிரபல வீராங்கனை குற்றச்சாட்டு!

சீனாவின் முன்னாள் துணை பிரதமர் சாங் காவோலி தன்னை கட்டாயப்படுத்தி