close
Choose your channels

ரஜினி மகளை அடுத்து இயக்குனராகும் கமல் மகள்: விரைவில் அறிவிப்பு என தகவல்.,.!

Tuesday, March 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களுமே இயக்குனர் ஆகியுள்ள நிலையில் அடுத்த கட்டமாக கமல்ஹாசன் மகளும் இயக்குனராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஸ்ருதிஹாசன் உள்ளார் என்பதும் சமீபத்தில் அவர் நடித்த ’வீரசிம்ஹரெட்டி’ மற்றும் ’வால்டர் வீரையா’ ஆகிய இரண்டு தெலுங்கு திரைப்படங்களும் நல்ல வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் பிரபாஸ் நடித்துவரும் ’சலார்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் அது மட்டும் இன்றி ’தி ஐ’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை ஸ்ருதிஹாசன் தனக்கு திரைக்கதை எழுதுவதில் மிகவும் விருப்பம் என்றும் அது குறித்த பணியில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ருதி ஹாசன் இதுகுறித்து மேலும் கூறுகையில், திரையுலகில் ஒரு புதிய பயணத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், திரைக்கதை மட்டுமின்றி கவிதைகள் மற்றும் பாடல்கள் எழுதுவதில் தனக்கு மிகவும் விருப்பம் என்றும் நேரம் கிடைத்தால் ஒரு திரைப்படத்தின் முழு ஸ்கிரிப்டை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து ஸ்ருதிஹாசன் இயக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.