ராஷ்மிகா மந்தனாவை அடுத்து 'தளபதி 66' படத்தில் இணைந்த பிரபலம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு முன்னரே ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் நாயகியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி விஜய்யின் படத்தில் முதல்முறையாக ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன் ஆகியோர் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் உருவாகும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார் என்பதும் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

மாஸ் மகராஜாவுடன் விஷ்ணு விஷால்: மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு பிரபல நடிகர் ரவி தேஜா ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 

நடிகை சமந்தாவின் ஐந்து மொழி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல நடிகை சமந்தா நடித்து முடித்துள்ள 5 மொழித் திரைப் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் படத்தில் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தமா? 

நடிகர் பிரபாஸ் நடித்த 'ராதே ஷ்யாம்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது ஆதிபுருஷ், சலார் உள்பட 3 படங்களில் நடித்து வருகிறார்.

'பீஸ்ட்' படத்தை தமிழத்திலும் தடை செய்ய வேண்டும்: முக்கிய அரசியல் கட்சி கோரிக்கை!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்'  திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை குவைத் அரசு தடை செய்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இது எங்களின் தவறல்ல, ஆனாலும் சமாளிப்போம்: லாஸ்லியாவின் உணர்வுபூர்வ பதிவு!

இது எங்களுடைய தவறல்ல, ஆனாலும் நாங்கள் சமாளிப்போம் என பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா தனது சமூக வலைத்தளத்தில் உணர்வுபூர்வமாக பதிவு செய்துள்ளார்.