'ஆர்.ஆர்.ஆர்', 'கேஜிஎஃப் 2', 'PS1' படங்களை அடுத்து 'துணிவு': அதிரடி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,November 26 2022]

இந்திய திரையுலகில் சமீபகாலத்தில் மிகப் பெரிய வசூலை குவித்த படங்கள் என்றால் அவை ’ஆர்.ஆர்.ஆர்’, ‘கேஜிஎஃப் 2’, ‘PS1’ ஆகிய படங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த மூன்று படங்களில் ‘PS1’ ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பதும், ’ஆர்.ஆர்.ஆர்’, ‘கேஜிஎஃப் 2’, அகிய இரண்டு திரைப்படங்களும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த 3 படங்களையும் அமெரிக்காவில் ரிலீஸ் செய்த சரிகம சினிமாஸ் என்ற நிறுவனம் தற்போது அஜித்தின் ’துணிவு’ படத்தையும் அமெரிக்காவில் ரிலீஸ் செய்ய உள்ளது. அஜித்தின் ’துணிவு’ படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை சரிகம சினிமாஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘துணிவு’ படத்தின் ஓவர்சீஸ் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள லைகா நிறுவனத்திடமிருந்து சரிகம சினிமாஸ் நிறுவனம் அமெரிக்க ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதை அடுத்து அமெரிக்காவின் முக்கிய திரையரங்குகளை லாக் செய்யும் பணியையும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

எனவே ’ஆர்.ஆர்.ஆர்’, ‘கேஜிஎஃப் 2’, ‘PS1’ படங்களை போல் ‘துணிவு படமும் அமெரிக்காவில் சூப்பர் ஹிட்டாகி வசூலை வாரிக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித், மஞ்சுவாரியர், வீரா, ஜான் கொகைன் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை எச் வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய்சேதுபதிக்கு சாபமிட்ட இயக்குனர் மிஷ்கின் .. 'டிஎஸ்பி' டிரைலர் விழாவில் பரபரப்பு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'டிஎஸ்பி' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது என்பதும் இதில் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கமல்ஹாசன் கலந்து கொண்டார்

'நீ எந்த ரூல்ஸையும் ஃபாலோ பண்ற மாதிரி தெரியலையே... விஜய்சேதுபதியின் 'டிஎஸ்பி' டிரைலர்

 விஜய் சேதுபதி நடித்த 'டிஎஸ்பி' திரைப்படம் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களை வைரலாகி வருகிறது. 

அஞ்சலி நடித்த ஃபால்.. டிஸ்னி ஹாட்ஸ்டாரின் அடுத்த ஸ்பெஷல் தொடர்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்  தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான, 'ஃபால் '( Fall ) , டிசம்பர் 9 முதல் உலகமெங்கும் ஒளிபரப்பு செய்கிறது!!  

பிக்பாஸ் சீசன் 6: இந்த வாரம் எவிக்சன் ஆவது இந்த போட்டியாளரா? 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் பட்டியலில் இருப்பவர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த வாரம் அசீம், தனலட்சுமி, கதிரவன்,

வடிவேலுவின் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்': ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா!

வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நாயகனாக நடிக்கும் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படம்