'செல்பி'யை அடுத்து ஏப்ரலில் ரிலீஸாகும் ஜிவி பிரகாஷின் இன்னொரு படம்!

  • IndiaGlitz, [Tuesday,March 29 2022]

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடித்த ‘ஜெயில்’ மற்றும் ‘பேச்சிலர்’ ஆகிய இரண்டு படங்கள் அடுத்தடுத்து சமீபத்தில் ரிலீசானது. இந்த நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி ஜிவி பிரகாஷ் நடிப்பில் மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’செல்பி திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் ரிலீஸ் செய்வதால் மிகப்பெரிய அளவில் புரமோசன் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் திரைப்படங்களில் ஒன்று ’ஐங்கரன்’. இந்த படம் ஏற்கனவே பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு அதன்பின் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது ஏப்ரல் 28ம் தேதி ’ஐங்கரன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி ‘செல்பி’ மற்றும் ஏப்ரல் 28ஆம் தேதி ‘ஐங்கரன்’ என ஒரே மாதத்தில் ஜிவி பிரகாஷின் இரண்டு திரைப்படங்கள் ரிலீஸாகவுள்ளன.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் ரவி அரசு இயக்கத்தில் உருவாகிய ‘ஐங்கரன்’ படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக மஹிமா நம்பியார் மற்றும் காளி வெங்கட் ,ஆடுகளம் நரேன், அருள்தாஸ் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

More News

சொந்த அண்ணன் கையால் அவுட்டாகிய பரிதாபம்… ஐபிஎல் சுவாரசியங்கள்!

நேற்றைய ஐபிஎல் லீக் போட்டி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.

'வலி எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுகிற மாதிரி': யாஷிகாவின் வைரல் வீடியோ!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா தனக்கு காது குத்தும் வீடியோவை வெளியிட்டு உள்ள நிலையில் அதில் 'வலி எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி' என்று கேப்ஷன் பதிவு செய்து உள்ளார்.

5 வருடமாக நடத்தப்பட்ட சூட்டிங்… பிரம்மாண்ட திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட்!

பாலிவுட்டில் பிக்-பி என அழைக்கப்படும் நடிகர் அமிதாப்பச்சன்

பீச்சில் பிகினி, அரபிக்குத்து பாடலுக்கு செம ஆட்டம்: வேற லெவலில் பிரபலமாகும் 'பேச்சிலர் நாயகி!

ஜிவி பிரகாஷ் நடித்த 'பேச்சிலர்' படத்தின் நாயகியான திவ்யபாரதி அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக வலம் வருகிறார். தினந்தோறும் அவர் பதிவு செய்யும்

ராஷ்மிகா மந்தனாவின் வேற லெவல் வொர்க்-அவுட் வீடியோ: இணையத்தில் வைரல்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனாவின் வேற லெவல் ஒர்க் அவுட் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது