'சிங்கம்' படத்திற்கு பின் மீண்டும் 2 ஆம் பாக சூர்யா படம்..!

  • IndiaGlitz, [Friday,April 28 2023]

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான ’சிங்கம்’ திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2013ம் ஆண்டு, மூன்றாம் பாகம் 2017 ஆம் ஆண்டு வெளியானது. இந்த நிலையில் ’சிங்கம்’ படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யாவின் படம் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ’கங்குவா’. தமிழ் உள்பட 10 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா 10க்கும் மேற்பட்ட கெட்டப்களில் நடித்து வருகிறார் என்பதும் சரித்திர கதையம்சம் கொண்ட காட்சிகள் இந்த படத்தின் பிளாஷ்பேக்கில் வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸில் அடுத்த பாகத்திற்கான லீட் இருக்கும் என்றும் ’கங்குவா’ படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் உருவாகும் என்றும் பட குழுவினர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் சூர்யா ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

’கங்குவா’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் சூர்யா படங்களில் இந்த படம் தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அடுத்த பாகமும் உருவாகும் என்ற தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும், வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் மதன் கார்க்கி வசனத்தில் உருவாகி வருகிறது. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.

More News

'உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க... 'காபி வித் காதல்' நடிகைக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'காபி வித் காதல்' என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த நடிகை மாளவிகா சர்மா செய்த செயலை பார்த்து உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு என ரசிகர்கள் அவருக்கு

'சிவா மனசுல சக்தி' இரண்டாம் பாகம் உருவாகிறதா? ஹீரோ யார் தெரியுமா?

எம் ராஜேஷ் இயக்குனராக அறிமுகமான முதல் திரைப்படம் 'சிவா மனசுல சக்தி' என்பதும் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஜீவா

நந்தினி அக்கா.. சோழர்களை முடிச்சுறு.. 'PS 2' ரிலீஸ் தினத்தில் மதுரையில் பரபரப்பு போஸ்டர்..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதும் இந்த படம் முதல் பாகத்தை

நடிகை கஸ்தூரியின் கிண்டல் பதிவுக்கு டீசண்ட்டாக பதில் அளித்த ஏ.ஆர்.ரஹ்மான்..!

 நடிகை கஸ்தூரி, ஏஆர் ரகுமான் மனைவிக்கு தமிழ் தெரியாதா? என கிண்டலுடன் பதிவு செய்த ட்வீட்டுக்கு ஏ ஆர் ரகுமான் டீசண்டாக பதில் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நீச்சல் குளத்தில் செம்ம கிளாமர்.. பிக்பாஸ் ரைசா வில்சன் ஹாட் புகைப்படங்கள்..!

தமிழ் திரையுலகின் நடிகையும் பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் இருக்கும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில்