close
Choose your channels

16 வருடங்களுக்கு பின் அஜித் படத்தில் இணையும் பிரபல நடிகர்!

Wednesday, January 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்து முடித்துள்ள ’வலிமை’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் இந்த படம் வரும் மார்ச் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ‘அஜித் 61’ திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் மார்ச் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜீத் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே போனிகபூர் அலுவலகத்தில் பிரகாஷ்ராஜ் சென்று பார்த்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது மீண்டும் ’அஜித் 61’ படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அஜித் நடித்த ’ஆசை’ ’ராசி’ மற்றும் ’பரமசிவன்’ ஆகிய திரைப்படங்களில் அஜித்துடன் பிரகாஷ்ராஜ் நடித்த நிலையில் மீண்டும் அஜித்துடன் 16 வருடங்கள் கழித்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.