சூர்யாவை போல் கிளைமாக்ஸில் சிறப்பு தோற்றத்தில் சூரி: எந்த படத்தில் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,October 19 2022]

சமீபத்தில் வெளியான உலகநாயகன் கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படத்தில் கிளைமாக்ஸில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார் என்பதும் அந்த பத்து நிமிட காட்சி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சூர்யாவை அடுத்து தற்போது சூரி வரும் தீபாவளி அன்று வெளியாகும் சிவகார்த்திகேயனின் ’பிரின்ஸ்’ படத்தின் கிளைமாக்ஸில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஆகிய இருவரும் 8 படங்களில் இணைந்து நடித்து உள்ள நிலையில் மீண்டும் இந்த படத்திலும் இணைந்து நடித்துள்ளனர். சூரி இந்த படத்தில் நடித்ததை படக்குழுவினர் ரகசியமாக இதுவரை பார்த்து வைத்து இருந்த நிலையில் தற்போது இந்த ரகசியம் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் மிகவும் பிரமாண்டமாக வெளியாக உள்ள ’பிரின்ஸ்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


 

More News

சிம்புவின் அடுத்த படத்தை இயக்குவது அஜித்-விஜய் பட இயக்குனரா? பேச்சுவார்த்தை ஆரம்பம்!

அஜித், விஜய் ஆகிய இருவரது சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனரின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. 

கீர்த்தி சுரேஷை பாராட்டிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன்: இவங்க ரெண்டு பேருக்கும் எப்படி பழக்கம்?

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் குமரன், கீர்த்தி சுரேஷ்க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடு ரோட்டில் பிக்பாஸ் குயின்ஸி ஆடிய குத்தாட்டம்: வீடியோ செம வைரல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான குயின்ஸி நடுரோட்டில் குத்தாட்டம் ஆடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

ஷாலினி அஜித்தின் தங்கையுடன் இணைந்த கார்த்தி.. இருவரும் சேர்ந்து என்ன செய்ய போறாங்க?

அஜித்தின் மனைவி ஷாலினி அஜீத்தின் தங்கை ஷாம்லி மற்றும் கார்த்தி இணைந்து சமூக சேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 

‘ராக்ஸ்டார்’ அனிருத்தின் பிரமாண்ட மியூசிக் கான்செர்ட்: வியப்பில் ஆழ்த்திய விளம்பரங்கள்

டிஸ்னி+ ஹாஸ்டார் - 'ராக்ஸ்டார்' அனிருத்தின் பிரமாண்ட மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சிக்காக,  தனித்துவமான விளம்பரங்கள் செய்து, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது!!