சூர்யாவை அடுத்து 'சார்பாட்டா பரம்பரை' குறித்து கருத்து கூறிய பிரபல நடிகர்!

பா ரஞ்சித்தின் ’சார்பாட்டா பரம்பரை’ படம் குறித்து ஏற்கனவே பல திரையுலக பிரமுகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். சற்றுமுன் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ’சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு பாராட்டு தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்தார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சூர்யாவை அடுத்து ஒரு சில நிமிடங்களில் சிவகார்த்திகேயனும் தனது டுவிட்டர் பக்கத்தில் ’சார்பாட்டா பரம்பரை’ குறித்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து உள்ளார். ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படத்திற்காக உழைத்த அனைவரும் பெருமை படவேண்டிய படைப்பு என்று அவர் கூறி உள்ளார். இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் இந்த படம் மிக அருமையான படம் என்றும் தயவு செய்து யாரும் இந்த படத்தை தவற விட வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல திரையுலக பிரமுகர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் ’சார்பாட்டா பரம்பரை படத்தை பாராட்டி வரும் நிலையில் தற்போது மாஸ் நடிகர்களும் தொடர்ச்சியாக தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'சார்பாட்டா பரம்பரை' படம் குறித்து சூர்யாவின் விமர்சனம்!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி உள்பட பலர் நடித்த 'சார்பாட்டா பரம்பரை திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது

ரஜினியின் 'அண்ணாத்த' படத்துடன் மோதும் சிவகார்த்திகேயன் படம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் அதே நாளில்

உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பாவமா இருக்கு: நயன்தாராவின் 'நெற்றிக்கண்' டிரைலர்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவான 'நெற்றிக்கண்' திரைப்படத்தின் ட்ரெய்லர் சற்று முன் வெளியான நிலையில் இந்த டிரைலர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

சார்பாட்டா என்பது சாதி சண்டையா? உண்மையை விளக்கும்  பரம்பரை சண்டைக்காரன்!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் மெட்ராஸ் பாக்சிங் வரலாற்றைக் கூறும் “சார்பாட்டா” திரைப்படம்

அந்த ஐந்து நாட்களுக்கு பின் 'வலிமை' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தல அஜித் நடித்துவரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு இன்னும் 5 நாட்கள் மட்டுமே பாக்கி இருப்பதாகவும் அந்த ஐந்து நாட்கள் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றை