close
Choose your channels

சூர்யாவை அடுத்து இன்னொரு பிரபலம்: கசிந்தது 'விக்ரம்' பட ரகசியம்!

Monday, May 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படத்தில் சூர்யா நடித்ததை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருந்த போதிலும் அந்த தகவல் சமீபத்தில் கசிந்தது என்பதும் அதனை அடுத்து படக்குழுவினர்களே அந்த தகவலை உறுதி செய்தனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சூர்யாவை அடுத்து இன்னொரு பிரபலமும் இந்த படத்தில் நடித்துள்ள ரகசியம் தற்போது கசிந்துள்ளது.

உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியிருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் 3ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்துள்ளதாகவும் அவரது கேரக்டர் அடுத்த பாகத்திற்கு ‘விக்ரம்’ படத்தை கொண்டு செல்லும் என்றும் கமலஹாசன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யாவை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு கேரக்டரில் நடித்து இருப்பதாக தற்போது தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் சிறு கேரக்டரில் நடித்திருந்த நிலையில் தற்போது ‘விக்ரம்’ படத்திலும் அவர் நடித்துள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் கசிந்துள்ளதால் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.