close
Choose your channels

'தளபதி 67', 'கைதி 2' படங்களுக்கு அடுத்து லோகேஷின் படம்: ஹீரோ இந்த பிரபலமா?

Saturday, November 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 67’ படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை அவர் இயக்கி முடித்து விட்டு கார்த்தி நடிக்கும் ’கைதி 2’ படத்தை இயக்கி உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு அவர் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

’மாநகரம்’, ‘கைதி’, ’மாஸ்டர்’ மற்றும் ’விக்ரம்’ ஆகிய நான்கு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ’தளபதி 67’ படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் மட்டுமின்றி இந்தியாவின் பிரபல நட்சத்திரங்கள் நடிக்க உள்ளதால் இந்த படத்தின் ஆச்சரியமான தகவல் மற்றும் பிரமாண்டமான வியாபாரம் குறித்த செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ’தளபதி 67’ படத்தை முடித்துவிட்டு கார்த்தி நடிக்கும் ’கைதி 2’ படத்தை லோகேஷ் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி பாகுபலி நடிகர் பிரபாஸ் நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்க இருப்பதாகவும், பான் இந்தியா திரைப்படமாக உருவாகயிருக்கும் இந்த படமும் லோகேஷ் சினிமா யுனிவர்ஸ் படங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos