கமல்ஹாசனின் 'தக்லைஃப்' படம் மட்டுமல்ல, இன்னொரு படத்திலும் இணையும் துல்கர் சல்மான்?

  • IndiaGlitz, [Saturday,May 04 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக்லைஃப்’ திரைப்படத்தில் துல்கர் சல்மான் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில் கமல்ஹாசனின் இன்னொரு படத்திலும் அவர் கௌரவத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடித்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து இருவரும் கால்ஷீட் காரணமாக விலகுவதாக கூறப்பட்ட நிலையில் அதன் பின்னர் மீண்டும் இந்த படத்தில் இணைந்து கொண்டனர் என்றும் இருவர் காட்சிகளின் படப்பிடிப்பு மிக விரைவில் நடக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கமல்ஹாசன் நடித்து வரும் இன்னொரு திரைப்படம் ’கல்கி 2898 ஏடி’ என்பதும் இந்த படத்தில் அவர் வில்லனாக நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் இந்த படத்தில்தான் துல்கர் சல்மான் கவுரவ தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் அவர் நடிக்க இருக்கும் தகவலை மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக படக்கூடியதாக தெரிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்டோர் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் துல்கர் சல்மான் இணைவது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படம் ஜூன் 27ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரஜினியின் 'கூலி' படத்தில் நடிக்க நிபந்தனை விதித்தாரா சத்யராஜ்?  பரபரப்பு தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'கூலி' படத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில்

'கூலி' பட விவகாரம்.. இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது குறித்து ரஜினிகாந்த் கருத்து..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'கூலி' படத்தின் முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில் அதில் தனது இசை இடம் பெற்றிருப்பதாகவும் அந்த இசையை நீக்க வேண்டும்

நேற்று தந்தை.. இன்று மகன்.. பாசத்தை பரிமாறும் இளையராஜா - யுவன் புகைப்படங்கள்..!

இசைஞானி இளையராஜா குடும்பத்தினர் தற்போது மொரீஷியஸ் நாட்டில் சுற்றுலா சென்றுள்ளனர் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின என்பதையும் பார்த்தோம்

புர்ஜ் கலிஃபா எதிரே மொட்டை மாடி நீச்சல் குளத்தில் டிடி.. வைரல் வீடியோ..!

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடி, துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் எதிரே உள்ள நட்சத்திர ஹோட்டல் மொட்டை மாடி நீச்சல் குளத்தில் ஜாலியாக இருக்கும் வீடியோவை தனது

கவினின் 'ஸ்டார்' திரைப்படத்தில் இத்தனை பாடல்களா? இசை ராஜ்யமே  நடத்தியிருக்கிறார் யுவன்..!

கவின் நடித்த 'ஸ்டார்' திரைப்படம் வரும் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.