'டூரிஸ்ட் பேமிலி' படத்தை அடுத்து இன்னொரு வெற்றிப்படமா? சசிகுமார் அடுத்த பட அப்டேட்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சசிகுமார் நடித்த ’டூரிஸ்ட் பேமிலி’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தமிழகம் முழுவதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி, தயாரிப்பாளர்களுக்கு வசூலை வாரி குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 1ஆம் தேதி வெளியான படங்களில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்குத்தான் குடும்ப ஆடியன்ஸ் அதிகமாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ’டூரிஸ்ட் பேமிலி’ படத்தை அடுத்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் இன்னொரு சசிகுமார் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. சசிகுமார் நடிப்பில், சத்ய சிவா இயக்கத்தில் உருவான ’ப்ரீடம்’ என்ற திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்குத் தயாரான நிலையில் உள்ளது.
தற்போது, மே 9ஆம் தேதி இந்த படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அனேகமாக அன்றைய தினம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை, அதில் ஈழத் தமிழர்களின் தொடர்பு உள்ளிட்ட காட்சிகளுடன் ’ப்ரீடம்’ படத்தின் டிரைலர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த படத்தை விரைவில் திரையரங்குகளில் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சசிகுமார், லிஜோமோ ஜோஸ், மாளவிகா அவினாஷ், போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா, ’பாய்ஸ்’ மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
உதயகுமார் ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு என பலர் பணியாற்றி உருவாக்கிய படமாக இது இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments