close
Choose your channels

12 வருடங்களுக்கு பிறகு கமல் படத்தின் விழாவை தொகுத்து வழங்கும் பிரபல தொகுப்பாளினி!

Sunday, May 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

12 வருடங்களுக்கு பின்னர் உலக நாயகன் கமல்ஹாசனின் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினி தொகுத்து வழங்க உள்ளார். 

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ’விக்ரம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் ரஜினிகாந்த், விஜய், சூர்யா உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்து வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினி டிடி என்ற திவ்யதர்ஷினி தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ’மன்மதன் அம்பு’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய டிடி அதன் பின்னர் 12 ஆண்டுகள் கழித்து தற்போது கமல் நடிக்கும் ’விக்ரம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.