close
Choose your channels

அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது இந்த இளம் இயக்குனரா? 

Saturday, January 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் உள்பட பலர் தற்போது இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து ஆரம்பித்துவிட்டனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் கமல்ஹாசன், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கவிருப்பதும் ஒரு இளம் இயக்குனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

அஜீத் தற்போது இளம் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் ’வலிமை’ படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்க இருப்பவர் இயக்குனர் கார்த்திக் நரேன் என்று கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே ’துருவங்கள் 16’, ‘மாஃபியா’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பதும், தற்போது அவர் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனுஷ் படத்தை இயக்கிய முடித்துவிட்டு அவர் அஜித்தின் 61வது படத்தை இயக்குவார் என்றும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இளம் இயக்குனர்களின் இயக்கத்தில் அஜித், விஜய் போன்ற மாஸ் நடிகர்கள் நடிப்பது கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய பாசிட்டிவ் ஆக பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.