close
Choose your channels

'வலிமை' தீம் மியூசிக்கை அடுத்து மீண்டும் ஒரு இசை மேஜிக்: யுவன் அசத்தல்!

Wednesday, December 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’வலிமை’ படத்தின் தீம் மியூசிக் சற்று முன் வெளியானது என்பதும் இந்த தீம் மியூசிக் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. யுவன்சங்கர்ராஜா கம்போஸ் செய்த அசத்தலான இந்த தீம் மியூசிக் முதல் முறை கேட்கும்போதே சூப்பராக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்த ’வலிமை’ படத்தின் தீம் மியூசிக் வெளியான ஒரு சில மணி நேரங்களில் விஷாலின் ’வீரமே வாகை சூடும்’ என்ற படத்திற்காக அவர் கம்போஸ் செய்த மற்றொரு தீம் மியூசிக் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த தீம் மியூசிக்கில் நிவேதிதா பாடிய பாடல் ஒன்றும் உள்ளது என்பது, இதில் யுவன் ஒரு இசை மேஜிக் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஷால், டிம்பிள் ஹையாதி, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை து.பா.சரவணன் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கவின்ராஜ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படம் வரும் ஜனவரி 26ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.