close
Choose your channels

'வல்லரசு' படத்தை அடுத்து மீண்டும் ஒரு கேப்டன் படம்.. ரீரிலீஸ் எப்போது?

Tuesday, April 15, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேப்டன் விஜயகாந்த் நடித்த 'வல்லரசு' திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கின்ற நிலையில், அவர் நடித்த இன்னொரு சூப்பர் ஹிட் படமும் மீண்டும் ரீரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல், விஜயகாந்த் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டன் விஜயகாந்த் நடித்த நூறாவது திரைப்படமான 'கேப்டன் பிரபாகரன்' என்பது அனைவரும் அறிந்ததே. இந்த திரைப்படம் கடந்த 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி, தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியானது. இப்போது, இந்த படம் வெளியாகி 34 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதனை மீண்டும் திரையிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படம், 300 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது. தற்போது, 'கேப்டன் பிரபாகரன்' படத்தை மீண்டும் பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தில், விஜயகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், ரூபினி, ரம்யா கிருஷ்ணன், எம். என். நம்பியார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இந்த படத்தில் இடம்பெற்ற "ஆட்டமா தேரோட்டமா" என்ற பாடல் இன்றும் பெரும் புகழ் பெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த படம் திரையரங்குகளில் எப்போது ரிலீஸ் செய்யப்படும் எனத் தயாரிப்பு குழுவினர் விரைவில் அறிவிக்க போகிறார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos