close
Choose your channels

இந்த ஆண்டு வெளியாகும் 3 த்ரிஷா படங்கள்.. மூன்றுமே மாஸ் ஹீரோக்கள்..!

Thursday, April 17, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா இன்னும் இளம் நடிகைகளுக்கு இணையாக ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, அவர் நடித்த மூன்று படங்கள் இந்த ஆண்டுக்குள் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான "தக்லைப்" என்ற படத்தில் த்ரிஷா முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நிலையில், அந்த படம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இதனை அடுத்து, சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் "சூர்யா 45" படத்திலும் த்ரிஷா நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், ஆயுத பூஜை அல்லது தீபாவளி தினத்தில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், தெலுங்கு திரை உலகின் மாஸ் ஹீரோ சிரஞ்சீவியின் "விஸ்வம்பரா" என்ற படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தையும் இன்னும் சில மாதங்களில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டுக்குள் த்ரிஷாவுக்கு மூன்று படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமின்றி, ஏற்கனவே த்ரிஷா நடித்த "விடாமுயற்சி", "குட் பேட் அகி’ மற்றும் "ஐடென்டிட்டி" ஆகிய மூன்று படங்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்த ஆண்டு மட்டும் அவரது ஆறு படங்கள் ரிலீஸ் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment