விஜய்சேதுபதி, ஜோதிகாவுடன் இணைந்த சிம்பு

  • IndiaGlitz, [Monday,September 11 2017]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஏற்கனவே நட்சத்திர கூட்டம் நிரம்பி வழியும் நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகரான சிம்பு இணைந்துள்ளார். இதனால் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மணிரத்னத்தின் அடுத்த படத்தில் ஏற்கனவே விஜய்சேதுபதி, பகத் பாசில், நானி, ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது சிம்புவும் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்தூள்ளது. இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் நான்கு ஹீரோக்களும் முதல்முறையாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நாயகிகள் பொருத்தவரையில் இதுவரை ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சாரா அலிகான் ஆகியோர் இந்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மூவரும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் முதல் படம் இதுதான்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

முன்னணி தமிழ் நடிகர்களுக்கு சமமானவர் மகேஷ்பாபு: கலைப்புலி எஸ்.தாணு

நேற்று சென்னையில் நடைபெற்ற 'ஸ்பைடர்' இசை வெளியீட்டு விழாவில் கோலிவுட்டின் பல பிரமுகர்கள் மகேஷ்பாபுவின் தமிழ் எண்ட்ரிக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் மகேஷ்பாபு: ஏ.ஆர்.முருகதாஸ்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிறப்பாக நடந்தது.

முருகதாஸ் 'நீட்' சப்ஜெட்டையும் தொட்டுருவார்னு நினைக்கிறேன்: விஷால்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும் முதல் நேரடி தமிழ் படமான 'ஸ்பைடர்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரபல தமிழ் நடிகர்களின் விழா போன்று பிரமாண்டமாக நடந்தது.

'வீரத்தின் உச்சகட்டம் அஹிம்ஸை. கமல்ஹாசனின் புதிய டுவீட்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே தனது டுவிட்டரில் சமூக கருத்துக்களை தைரியமாக கூறி வரும் நிலையில்

ராம்ரஹிம் அறையில் உள்ள சுரங்கப்பாதை எங்கே செல்கிறது? திடுக்கிடும் தகவல்

சமீபத்தில் பெண் சீடர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டு உறுதியானதால் சாமியார் ராம்ரஹீம் சிங் அவர்களுக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது என்பது தெரிந்ததே.