ஒரே பட வெற்றி: ரஜினி, அஜித், விஜய்யை சம்பளத்தில் முந்திய கமல்ஹாசன்?

கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அந்த ஒரே படத்தின் வெற்றியால் தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களான ரஜினிகாந்த், அஜீத், விஜய் ஆகியோர்களை கமல்ஹாசன் முந்திவிட்டதாக கோலிவுட் திரையுலகில் கூறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்திற்கு 100 கோடி வாங்கி வருகிறார் என்றும் ’ஜெயிலர்’ திரைப்படத்திற்கும் அவர் ரூ.100 கோடி வாங்கியதாகவும் கூறப்பட்டது. அதேபோல் லைகா நிறுவனம் தயாரிக்கும் ’ஏகே 62’ படத்தில் நடிக்க அஜீத் 105 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தளபதி விஜய் தற்போது நடித்து வரும் ’வாரிசு’ திரைப்படத்திற்காக 120 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசன் தனது அடுத்த படத்தின் சம்பளத்தை 130 கோடியாக உயர்த்தி உள்ளதாகவும் அந்த சம்பளத்தை தர தயாரிப்பாளர்கள் தயாராக இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கமல்ஹாசனின் திரைப்படம் வெளியாகாமல் இருந்த நிலையில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த ஒரே ஒரு வெற்றி காரணமாக ரஜினி, அஜித், விஜய் சம்பளத்தை கமல்ஹாசன் முந்திவிட்டதாக கூறப்படுகிறது.

More News

விஜய்தேவரகொண்டாவின் 'லைகர்' சென்சார், ரன்னிங் டைம் தகவல்: எத்தனை சண்டை? எத்தனை பாடல்?

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த 'லைகர்' என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ளது.

விக்ரமை அடுத்து மீண்டும் கேமியோ ரோலில் சூர்யா: ரோலக்ஸ்க்கு இணையாக இருக்குமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'விக்ரம்' திரைப்படத்தில் கடைசி ஐந்து நிமிடம் ரோலக்ஸ் என்ற கேமியோ ரோலில் நடித்த சூர்யா நடிப்பில் கலக்கி விட்டார்

கடலுக்கு அடியில் மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்: வைரல் வீடியோ!

அஜித்தின் ரசிகர்கள் அவ்வப்போது வித்தியாசமாக ஏதாவது செய்து வருவார்கள் என்பதும் அது குறித்த வீடியோ, புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே. 

ஆர்ஜே அர்ச்சனாவின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா?

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக இருக்கும் ஆர்ஜே அர்ச்சனாவுக்கு இருக்கும் சொத்து மதிப்பு குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 

'இந்தியன் 2' படத்தில் இருந்து விலகினேனா? காஜல் அகர்வால் கூறிய ஆச்சரிய தகவல்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும்