யானை, தமிழ் ராக்கர்ஸ் படங்களை அடுத்து அருண்விஜய்யின் அடுத்த பட ரிலீஸ் தேதி!

  • IndiaGlitz, [Sunday,August 21 2022]

அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான ’யானை’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதேபோல் அருண் விஜய் நடித்த ’தமிழ் ராக்கர்ஸ்’ என்ற வெப்தொடரும் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’சினம்’ என்ற திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

அருண்விஜய், பாலக் லால்வானி, காளி வெங்கட், வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள ’சினம்’ திரைப்படத்தை ஜிஎனார். குமரவேலன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவில் ராஜாமுகமது படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் ஏற்கன்பவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தில் அருண் விஜய் போலீஸ் கேரக்டரில் நடித்து கலக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே அருண் விஜய்யின் ஹாட்ரிக் வெற்றி படத்தின் ரிலீஸ் தேதி நாளை வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிம்பு பட நாயகியுடன் திருமணமா? பிரபல இயக்குனர் விளக்கம்!

சிம்பு அறிமுகமான படத்தில் அறிமுகமான நடிகை ஒருவர் பிரபல இயக்குனருடன் காதலில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து அந்த இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். 

தனுஷ் பட நாயகிக்கு ஆண் குழந்தை: ரசிகர்கள் வாழ்த்து!

தனுசுடன் நடித்த நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜெயம் ரவியின் 30வது படத்தின் சூப்பர் அப்டேட்!    

ஜெயம் ரவி நடிக்க இருக்கும் 30வது படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது என்பதும் இந்த பூஜையில் நாயகன் ஜெயம் ரவி, நாயகி பிரியங்கா மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

ரஜினியுடன் லெஜண்ட் சரவணன்: வைரல் புகைப்படங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படங்களை லெஜண்ட் சரவணன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து 'மறக்க முடியாத நினைவுகள்' என பதிவு செய்திருப்பதை

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த நாயகி மரியா!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'பிரின்ஸ்'  திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் நாயகியான உக்ரைன் நாட்டின் மரியா என்பவர் சூப்பர் அப்டேட்