close
Choose your channels

சூர்யா-ஜோதிகாவை அடுத்து தடுப்பூசி போட்டு கொண்ட மற்றொரு நட்சத்திர தம்பதி!

Sunday, July 18, 2021 • தமிழ் Comments

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்து கொண்டே வருகிறது. இருப்பினும் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் மூன்றாம் அலை தோன்ற வாய்ப்பு இருப்பதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகின்றன.

அதேபோல் திரையுலக பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்களை பதிவு செய்து தங்கள் ரசிகர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பல திரையுலக பிரபலங்கள் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் நட்சத்திர தம்பதிகளான சூர்யா - ஜோதிகா தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என்பதும் அதுகுறித்த புகைப்படங்கள் வைரலானது என்பதையும் பார்த்தோம். தற்போது தமிழ் திரையுலகின் மற்றொரு நட்சத்திர தம்பதிகளான பிரசன்னா-சினேகா தம்பதிகளும் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz