தேனியில் கழுதைக்கும் நாய்க்கும் நடந்த வினோத திருமணம் – காதலர் தின எதிர்ப்பு

  • IndiaGlitz, [Saturday,February 15 2020]

உலகம் முழுவதும் காதலின் அடையாளமாக பிப்ரவரி 14 காதலர் தினம் கொண்டாடப் பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய கொண்டாட்டங்களுக்கு பல்வேறு அமைப்பினர் தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்து வருவதும் வாடிக்கையாகி இருக்கிறது.

காதலர் தினம் போன்ற கொண்டாட்டங்களை ஊக்கு விப்பதால் சமூகத்தில் பல பிரச்சினைகள் வரும்.  இதுபோன்ற விழாக்களால் ஒழுக்கச் சீர்க்கேடுகளும், பொது இடங்களில் அத்து மீறல்களும் அரங்கேறுகின்றன. காதலர் தினம் என்பது நமது கலாச்சாரத்திற்கு அழகல்ல என்பதைத் தெரிவிக்கும் விதமாக சில நேரங்களில் வினோத செயல்களில் ஈடுபடுவதும் உண்டு.

தேனியை அடுத்த பொம்மையகவுண்டன் பட்டியில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் நேற்று கழுதைக்கும் நாய்க்கும் திருமணம் நடத்தி வைக்கப் பட்டது. இதில் கழுதைக்கும் - நாய்க்கும் சந்தனம், குங்குமம் போன்றவற்றைக் கொண்டு அலங்காரம் செய்தனர். பின்பு கழுதைக்குத் தாலியும் கட்டப்பட்டது.

காதலர் தின எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கோஷங்களும் எழுப்பப் பட்டன. கழுதை பகவானே! கழுதை பகவானே! காதலர் தினம் கொண்டாடுபவர்களுக்கு நல்ல புத்தி கொடு  பகவானே என்ற முழக்கங்களை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினர். 

More News

சிம்ரனை தனது பாணியில் ரசித்த பார்த்திபன்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்வரை அஜித், விஜய், சூர்யா உள்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் குடியிருந்தவர் நடிகை சிம்ரன்.

இயக்குனர் சி.வி.குமாரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

பா ரஞ்சித் இயக்கிய முதல் படமான 'அட்டகத்தி', கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய முதல் படமான 'பீட்சா' மற்றும் சூது கவ்வும், முண்டாசுப்பட்டி, உள்பட பல வெற்றித்

பிறக்க போகும் பிள்ளைகள் தலையிலும் கடன் சுமை: கமல்ஹாசன்

தமிழக பட்ஜெட் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களால் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம்போல் இந்த பட்ஜெட்டையும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தும்,

'இந்தியன் 2', 'தலைவன் இருக்கின்றான்' அப்டேட் கொடுத்த கமல்!

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைக்காவின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வருகிறது 'இந்தியன் 2' திரைப்படம்.

பஜாஜின் புதிய BS6 பைக்குகள்.. விலை என்ன தெரியுமா..?

ஏப்ரல் 1, 2020 முதலாக, நாடெங்கும் BS-6 மாசு விதிகள் அமலுக்கு வருவது தெரிந்ததே. இதனால் வாகனத் தயாரிப்பாளர்கள், தமது தயாரிப்புகளை அதற்கேற்ப மேம்படுத்தும் பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.