அஜித் படத்தை தயாரிப்பது உண்மையா? ஏஜிஎஸ் விளக்கம்

கோலிவுட் திரையுலகில் திரைப்படங்கள் தயாராவதை விட அதிகமாக தயாராவது வதந்திகள் தான் என்பதும், குறிப்பாக ஒருசில யூடியூப் சேனல்களிலும் சமூக வலைதளங்களிலும் தங்களது கற்பனை குதிரைகளை பறக்கவிட்டு இஷ்டத்துக்கு செய்திகளை வெளியிட்டு வருவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் சமீபத்தில் அஜித் படத்தை இயக்குனர் சுதா கொங்காரா இயக்க இருப்பதாகவும் அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இந்த செய்தியை அடுத்து தற்போது ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பனா தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில் நாங்கள் இதுவரை எந்த படத்தையும் தயாரிக்க ஒப்பந்தம் செய்யவில்லை என்றும் எங்கள் நிறுவனத்துடன் சம்பந்தப்படுத்தி சில வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்றும் அவை அனைத்தும் உண்மை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அஜித் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக வெளிவந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்பது தெரிய வருகிறது. இதுவே வதந்தி என்றால் அஜித்தை சுதா கொங்கரா சந்தித்ததும் வதந்தியாகத்தான் இருக்கும் என்று கருதப்படுகிறது.

More News

விவசாயிகளுக்கு வழங்கும் நிதியுதவித் திட்ட முறைகேட்டில் சட்டரீதியான நடவடிக்கை- தமிழக முதல்வர் அதிரடி!!!

இந்தியா முழுவதும் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் (PM-Kissan) திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு சம்பவத்தில் தொடர்புடையவர்கள்மீது சட்டரீதியாக

சஞ்சனா கல்ராணியுடன் லிவிங் ரிலேசன்ஷிப்பில் இருந்தது யார்? போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனா கல்ராணியுடன் பிரபல டாக்டர் ஒருவர் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது 

வீடு வீடாக கொரோனா பரிசோதனை நடத்திய மர்மநபர்கள்… இளம்பெண் மாயமான அவலம்!!!

பெங்களூருவில் இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகக் கூறி மர்மநபர்கள் ஆம்புலஸில் அழைத்துச் சென்ற சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆன்லைனில் படிக்க வசதி இல்ல… பெற்றோர்களே பள்ளி மாணவர்களை கூலி வேலைக்கு அனுப்பும் அவலம்!!!

கர்நாடக மாநிலத்தின் ராய்ச்சூர் பகுதியில் ஆன்லைனில் படிக்க வசதி இல்லாத காரணத்தால் பெற்றோர்களே பள்ளி மாணவர்களை கூலி வேலைக்கு அனுப்பும் அவலம் நடைபெற்று

ஐபிஎல் திருவிழா: ஸ்பெஷல் டிரைலர்; தட்டித் தூக்குவாரா தல தோனி?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியாகக் கருதப்படுவது மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி.