ஏஜிஎஸ் நிறுவனத்துடன் இணைந்த மாதவன்: அதிரடி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,October 19 2021]

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் நிறுவனத்துடன் நடிகர் மாதவன் இணைந்து உள்ள அதிரடி அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது.

பிரபல நடிகர் மாதவன் நடித்து இயக்கிய ’ராக்கெட்டரி’ என்ற திரைப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே தெரிந்ததே.

மாதவன், சிம்ரன் உள்பட பலர் நடித்த இந்த திரைப்படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய ஆறு மொழிகளில் தயாராகியுள்ள இந்த திரைப்படத்தின் தமிழக திரையரங்கு ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து இந்த படம் மிகப் பெரிய அளவில் புரமோஷன் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.