பெப்சி தொழிலாளர்களுக்காக 'பிகில்' தயாரிப்பாளர் கொடுத்த மிகப்பெரிய தொகை

  • IndiaGlitz, [Monday,April 06 2020]

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர். இவர்களுக்கு உதவி செய்திடும் வகையில் நடிகர் நடிகைகள் தாராளமாக நிதி உதவி அளிக்கவேண்டும் என பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி அவர்கள் கேட்டுக் கொண்டார்.

ஆர்கே செல்வமணியின் வேண்டுகோளை ஏற்று ரஜினிகாந்த், கமலஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்பட பல நடிகர்கள் லட்சக்கணக்கில் நிதியுதவி செய்தனர். அதேபோல் நயன்தாரா ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற நடிகைகளும் பெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தளபதி விஜய் நடித்த ’பிகில்’ உள்பட பல வெற்றிப்படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் இணைந்து ரூபாய் 15 லட்சம் பெப்சி தொழிலாளர்களுக்காக நிதி உதவி செய்துள்ளனர் இதனையடுத்து பெப்சி தொழிலாளிகள் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ரூ.30 ஆயிரம் கோடிக்கு பட்டேல் சிலை விற்பனையா? ஆன்லைன் விளம்பரத்தால் பரபரப்பு!

உலகின் மிகப்பெரிய சிலையான சர்தார் வல்லபாய் படேலை சிலையை கடந்த 2018ஆம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் குஜராத் மாநிலத்தில் திறந்து வைத்தார் என்பது தெரிந்ததே.

முதல் முறையாக மிருகங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று: அதிர்ச்சித் தகவல் 

சீனாவின் வூகான் என்ற மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் சீனாவை மட்டுமின்றி உலகிலுள்ள 190 நாடுகளில் பரவி ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி வருவது மட்டுமின்றி

'கோபேக் சைனா வைரஸ்': தீப்பந்தம் ஏந்தி திடீரென கோஷம் போட்டதால் பரபரப்பு

கொரோனா வைரசுக்கு எதிராக இந்திய அரசு கடந்த சில நாட்களாக தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கும் நிலையில் அரசுக்கும் அரசு நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

நேற்றிரவு 9 மணியின் சாட்டிலைட் புகைப்படம்: இணையத்தில் வைரல் 

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை ஏற்ற கூறினார் இந்த நிகழ்வை கோடிக்கணக்கான இந்தியர்கள் நிகழ்த்தி நாட்டின் ஒற்றுமையை நிரூபித்தனர்

9 மணி விளக்கேற்றும் நிகழ்வு: ஆர்வக்கோளாறால் ஏற்பட்ட அசம்பாவிதம்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று இரவு 9 மணிக்கு கொரோனாவுக்கு எதிரான போரில், நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதை நிரூபிப்பதற்காக