இரு அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை. ஓபிஎஸ் முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Tuesday,April 25 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஓபிஎஸ் முதல்வர் பதவியேற்று ஆட்சியை நடத்தி கொண்டிருந்தார். ஆனால் கட்சி, ஆட்சி இரண்டையும் தனது கைக்குள் இருக்க வேண்டும் என்று சசிகலா ஆசைப்பட்டதன் விளைவு அதிமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்தது. இதனால் கட்சியின் பெயர் மற்றும் சின்னமும் முடக்கப்பட்டது.
இந்த நிலையில் சசிகலாவுக்கு சிறை, தினகரன் மீதான விசாரணை என கட்சிக்கு தொடர்ந்து கெட்ட பெயர் வந்ததால் மூத்த அமைச்சர்கள் சசிகலா குடும்பத்தினர்களை கட்சியில் இருந்து ஓரங்கட்டிவிட்டு மீண்டும் ஓபிஎஸ் அணியுடன் இனைந்து ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க முடிவு செய்தனர்.
இதன் காரணமாக இரண்டு அணியிலும் ஏழுபேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு இணைப்புக்கான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற இருந்ததாக தகவல்கள் வந்தது. ஆனால் இரு அணிகளும் இணைந்துவிட கூடாது என்று ஒருசிலர் செய்த சூழ்ச்சியால் நேற்றைய பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறவில்லை. இந்நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், இருதரப்பிலும் பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழல் கனிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே எந்த நேரமும் இணைப்புகான பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

More News

ஒரு மணி நேரத்தில் பிடிபட்ட சென்னை சென்ட்ரல் ரயில் வெடிகுண்டு மிரட்டல்காரர்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று ஒரு மிரட்டல் கடிதம் மாவோயிஸ்ட்களிடம் இருந்து வந்ததாக சற்று முன்னர் பார்த்தோம்.

ஆபாச படங்கள் நடித்த நடிகைக்கு கிடைத்த கடவுளின் ஆசி!

சிறு வயதில் பக்கத்து வீட்டு நபர் ஒருவரால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான கிறிஸ்சி அவுட்லா என்பவர் சமீப காலம் வரை ஒரு மணி நேரத்துக்கு $1000 சம்பளம் வாங்கும் ஆபாச பட நடிகையாக இருந்தார்.

4 ரயில்களில் குண்டு வெடிக்கும்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த மிரட்டல் கடிதம்

சட்டீஸ்கர் மாநிலத்தில் நேற்று மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் மூன்று தமிழக வீரர்கள் உள்பட 26 வீரர்கள் பலியான அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீள முடியவில்லை.

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளை தத்தெடுத்தார் ராகவா லாரன்ஸ்

தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் ஒரு குழந்தையை வளர்க்கவே சிரம்ப்பட்டு வருகின்றனர்

மீண்டும் இணையும் சூர்யா-ஹரி: 'சிங்கம் 4' தொடங்குகிறதா?

நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஹரி இணைந்து உருவாக்கிய சிங்கம் படத்தின் மூன்று பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சிங்கம் 3' படத்தின் வெற்றி விழாவில் விரைவில் 'சிங்கம் 4' படத்திற்காக சூர்யாவும் நானும் இணைவோம்' என்று ஹரி கூறியிருந்தார்...