இடம் மாறினார் ஓபிஎஸ். தொண்டர்கள் வாழ்த்து

  • IndiaGlitz, [Thursday,March 09 2017]

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலாவின் அதிகாரத்தில் இருந்து பிரிந்து வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக பொதுப்பணித்துறையில் இருந்து வீட்டை காலி செய்யும்படி நோட்டீஸ் வந்தது.
இதனையடுத்து ஓபிஎஸ் போயஸ் கார்டனில் உள்ள புதிய வீட்டுக்கு குடியேறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் கிரீன்வேஸ் சாலை அரசு இல்லத்தை இன்று காலி செய்த ஓபிஎஸ் சற்று முன்னர் ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள புது வீட்டுக்கு குடியேறினார். புதிய வீட்டுக்கு குடியேறியுள்ள ஓபிஎஸ் அவர்களுக்கு அதிமுக தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்ய கமிஷன் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று ஓபிஎஸ் அணியினர் நடத்திய உண்ணாவிரதம் வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து, விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களையும் தொண்டர்களையும் ஓபிஎஸ் நேரடியாக சந்திக்கவுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

More News

ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்ட சிவா கெட்ட சிவா'! திரை முன்னோட்டம்

ராகவா லாரன்ஸ் நடித்து தயாரித்து இயக்கிய 'காஞ்சனா 2' திரைப்படம் தமிழ் சினிமாவுலகில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று. ரூ.17 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.120 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனை செய்தது. இதனால் அவருடைய அடுத்த படமான 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படம் 

பாண்டிராஜ்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படம்: முக்கிய தகவல்கள்

தேசிய விருது பெற்ற 'பசங்க' படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகி தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பாண்டிராஜ். சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' படத்திற்கு பின்னர் சமீபத்தில் ஒரு படத்தை அவர் தயாரிக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கவுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன...

அஜித்துடன் சந்திப்பு. அப்செட் ஆன விஜய்சேதுபதி மனைவி

தல அஜித் ஒரு நல்ல நடிகர் மட்டுமின்றி சிறந்த மனிதநேயம் மிக்கவர் என்பதாலே அவருக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். மேலும் திரையுலகிலும் அதிக ரசிகர்களை கொண்டவர் அஜித் தான் என்பது குறிப்பிடத்தக்கது...

சிம்பு இசையில் பாடிய டி.ராஜேந்தர்-உஷா தம்பதி

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த சந்தானத்தை திரையுலகிற்கு அறிமுகம் செய்த நடிகர் சிம்பு, அவர் ஹீரோவாக நடித்து வரும் 'சக்க போடு போடு ராஜா' என்ற படத்திற்கு இசையமைத்தும் வருகிறார். சிம்பு இசையமைக்கும் முதல் படமான இந்த படத்தில் ஏற்கனவே அனிருத், யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் ஒரு பாடலை பாடியுள்ளனர் என்பதை பார்த்த

நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தின் டைட்டில் அறிவிப்பு

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்றால் சிவாஜி கணேசனை குறிப்பிடுவது போல நடிகையர் திலகம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது நடிகை சாவித்திரி தான். இன்றும் கூட பல நடிகைகள் சாவித்திரியின் நடிப்பை பின்பற்றி நடித்து வருகின்றனர்...